/* */

வடகிழக்கு பருவ மழையை விழுப்புரம் மாவட்டம் சமாளிக்குமா?

Northeast Monsoon -எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை விழுப்புரம் மாவட்டம் சமாளிக்குமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது

HIGHLIGHTS

வடகிழக்கு பருவ மழையை விழுப்புரம் மாவட்டம் சமாளிக்குமா?
X

பைல் படம்

Northeast Monsoon -விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் சில நாட்களில் வரவுள்ள வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் இப்போதே முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பருவமழையினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தி, அதற்கான பணிகளில் ஈடுபட அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைபோது மாவட்டத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, வெள்ளபகுதிகளாக மாறிவிடும், குறிப்பாக விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. நகரில் உள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து அந்த குடியிருப்புகளில் தத்தளிக்கிறது.

அதுபோல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலே விழுப்புரம் மக்களுக்கு கூடவே அச்சமும் வந்துவிடுகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் திடீர் மழைக்கே தாக்குபிடிக்காத வகையில் விழுப்புரம் நகரம் உள்ளது, பல குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளமான சாலையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கடந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையினால் மக்கள் அதிகளவில் அவதிப்பட்டனர், அதனால் இந்த ஆண்டு வரும் பருவமழையினால் அந்த நிலையை மக்கள் சந்திக்கக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன,

விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து தந்தை பெரியார் நகர் வரையும், அதுபோல் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாம்பழப்பட்டு ரயில்வே கேட் வரையும் சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

வடிகால் வாய்க்கால் பாலம் பணிக்காக கோலியனூரான் வாய்க்காலின் இருபுறமும் வாய்க்காலை அடைத்துவிட்டு பாலம் பணிகளை மேற்கொண்டு வருவதால், தற்போது சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அந்த மழைநீரும் கோலியனூரான் வாய்க்கால் வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.

இப்பணிகளை விரைந்து பருவமழை தொடங்கும் முன்பு முடிக்காவிட்டால் பருவமழையின்போது விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும் அபாயம் ஏற்படும் என பெரும்பாலான மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர், அதனால் ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படும். சாலைகள் மேலும் பள்ளம் படுகுழிகளாக மாறும்,

நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 5 கிராம ஊராட்சிகளான காகுப்பம், பானாம்பட்டு, எருமனந்தாங்கல், வழுதரெட்டி, சாலாமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 17 வார்டுகளில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கபட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அப்பகுதிகளில் ஏற்கனவே இருந்த தார் சாலை, சிமெண்டு சாலைகளை பெயர்த்து பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமலும், சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த தொடர் மழையினால், அங்குள்ள சாலைகள் மேலும் பள்ளம் படுகுழிகளாக மாறி காட்சி தருகிறது.

நகரத்தில் நடக்கும் வடிகால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனால் வரும் பருவமழை சமயத்தில் அங்குள்ள குடியிருப்புகள் ஓரளவு தப்பிக்கும். இல்லையெனில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருக்கும்.

ஏனெனில் கடந்த பருவமழை காலங்களில் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீர் உடனடியாக வெளியேறாததால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர், மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருக்க இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம், வடிகால் வாய்க்கால் அமைத்தல், வாய்க்கால் பாலம் பணிகளை விரைந்து முடித்தல், வாய்க்காலை தூர்வாருதல், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளில் முன்கூட்டியே களமிறங்கியுள்ளது.

ஆனால் இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பணிகள் மந்த நிலையில் பணிகள் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட துறையை முடுக்கி, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அப்போது தான் வடகிழக்கு பருவமழையை சமாளிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பு பகுதிகளிலும் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சம்மந்தப்பட்ட துறை மற்றும் பணியாளர்களை முடுக்கி, அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என மாவட்ட மக்களின் மொத்த கோரிக்கையாக உள்ளது .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Updated On: 12 Oct 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு