தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் இடம்

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் இடம்
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம் தடுப்பூசி போடுவதில் சென்னைக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8, 22,551 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது,

(01/01/2022) அன்று 1,006 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் 11 பேருக்கு பாசிடிவ் உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாசிடிவ் 0.10 சதவீதம் ஆகும் (02/01/22) 978 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.38 சதவீதமாக உள்ளது.மாவட்டத்தில் நேற்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே,91 லட்சத்து 74ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்க பட்டுள்ளது,

மாவட்டத்தில் 38,425 தடுப்பூசி இருப்பு உள்ளது, 2/1/22 ஞாயிற்றுக்கிழமை 17 வது தடுப்பூசி முகாமில் 1,00,0,10 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர், இதுவரை மாவட்டத்தில் 25,68,370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனின் சரியான திட்டமிடுதலும், சீரிய முயற்சியாலும், தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 17 வது கொரோனா நோய் தடுப்பூசி சிறப்பு முகாமில், விழுப்புரம் மாவட்டம் 1,00,010 (ஒரு லட்சத்து பத்து) நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை, தொடர்ந்து ஐந்து வாரங்களாக தக்கவைத்து உள்ளது,

அதனால் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு விழுப்புரம் மாவட்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆகியோர் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!