விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இயங்கிவரும் யோகா பயிற்சி மையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பயிற்சி மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா,நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் இராம்சந்திரன்.விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடந்த பயிற்சியில் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார்150 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story
ai healthcare products