விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி
X

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடந்தது.

Breastfeeding Awareness - விழுப்புரத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

Breastfeeding Awareness - தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் ஆக.12 முதல் 17ம் தேதி வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த தாய்ப்பால் வார விழாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அந்த வகையில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி தலைமை வகித்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பேரணியில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பினர். பேரணியின்போது, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்தது, குழந்தையின் முதல் தடுப்பு மருந்து சீம்பாலாகும், சீம்பால் அளவில் குறைவாகவே இருக்கும்., ஆனால் நோய் எதிர்ப்பு திறன் மிக்கது, பிறந்த குழந்தையின் தேவை தாய்ப்பால் மற்றும் தாயின் அரவணைப்பு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆறு மாதம் முடிந்தவுடன்ஞூஞூ தாய்பாலுடன் கூடுதல் உணவுகளை சேர்த்து கொடுக்க வேண்டும், குறைமாத குழந்தை மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கும் தாய்பாலே சிறந்தது, வேலைக்கு போகும் தாயும் தாய்பாலை முழுமையாக புகட்டலாம், சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவங்களின் பிறந்த குழந்தைக்கு உடனடியாக தாய்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தை பிறந்தது முதல் 2 வயது வரை மூளை வளர்ச்சி 80 சதவீதம் வளர்ச்சி அடையும் என்பதால் தாய்ப்பால் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பொற்கொடி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!