விழுப்புரத்தில் இன்று சுமைப்பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இன்று சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரத்தில் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் தனி நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த விழுப்புரம் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.பழனி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, விழுப்புரம் மாவட்ட சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், பணியிடங்களில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டாஸ்மாக், ரயில்வே குட்செட் டி.பி.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசு கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பி,எப், இ. எஸ். ஐ. உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும், நலவாரிய பலன்களை இருட்டிப்பாக்கி வாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும்,
சுமைப்பணி தொழிலாளர்கள் குவியலாக பணி செய்யும் இடங்களில் அனைத்து வசதிகளும் கூடிய ஓய்வரை அமைத்துக் கொடுக்க வேண்டும் டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் ஏற்றுக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர் எம்.முருகன், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம் மேளன குழு ஐயப்பன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.
இதேபோன்று அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் விழுப்புரம் மாவட்டக் கிளை சார்பில் இன்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார், முன்னதாக மாவட்ட செயலாளர் டி.கே.பத்மநாபன் அனைவரையும் வரவேற்று பேசினார்.பி.பெருமாள்,ஏ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன்,மாநில அமைப்பு செயலாளர் பளிங்கன், இராமமூர்த்தி,கே.நாகராஜன், வீராசாமி,பி.பாலு,வி. புஷ்பநாதன், ஏ.மணி,டி.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு இ.பி.எஸ்-95 பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூபாய் 9000-ம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணம் மாதம் ரூபாய் 3000-ம் வழங்க வேண்டும்,மறுக்கப்பட்ட ஆர்ச்சி கம்முடேஷன் வசதிகளை திரும்ப வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி வழங்க வேண்டும்,வருடாந்திர நிவாரணம் வழங்கவேண்டும், தகுதி உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயர்பென்சன் வழங்க வேண்டும், தகுதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டு வெயிட்டேஜ் வழங்க வேண்டும், அண்டை மாநிலமான-கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களின் பென்சன்தாரர்களுக்கு வழங்குவதுபோல் தமிழ்நாடு அரசும் சமூக பாதுகாப்புடன் கூடிய தனி பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் கே.பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu