பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
X
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் வழக்கு வரும் 30ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்திருந்தார்

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை வருகிற 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்,அன்றைய தினம் மத்திய மண்டல முன்னாள் ஐஜி ஜெயராம், கள்ளக்குறிச்சி முன்னாள் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கணவரான ஐஏஎஸ் அதிகாரி பார்த்திபன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags

Next Story
வயதுக்கு ஏற்ற உப்பு அளவு தெரியுமா? உடலுக்கு முக்கிய அறிவுரை!..