விழுப்புரத்தில் கணவனை கொலை செய்த மனைவி கைது

விழுப்புரத்தில் கணவனை கொலை செய்த மனைவி கைது
X
விழுப்புரத்தில் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது; அவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரேகா (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக, இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்த சந்தோஷூக்கும் மனைவி சுரேகாவுக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுரேகா, கத்தியை எடுத்து கணவன் சந்தோஷை குத்தி கொலை செய்துள்ளார். இதில், சம்பவிடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!