விழுப்புரத்தில் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் 500 பேருக்கு நலத்திட்டம்
விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அருட்பிரகாச வள்ளலார் ஐப்பசி 07 ந் தேதி, (கடந்த 22-10-1873ல்) வடலூர் -மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில், உலகுகட்டியாளும் சுத்த சன்மார்க்க நீதிக்கொடி கட்டிக்கொண்ட 148 - வது ஆண்டு, திருநாளையொட்டி,
24.10.2021 ஞாயிற்றுக்கிழமை , கொடிநாள் விழா விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் கொண்டாடினர், முன்னதாக காலை 8.00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அருள்மாளிகை சன்மார்க்க அன்பர்கள். சிவக்குமார், கெளசல்யாபாரதி, கருணாகரன், கிருபாகரன், பிரேம்ராஜன், ராஜேந்திரன், மணிமேகலை, வாசுதேவன் ஆகியோர் பாடினர், தொடர்ந்து காலை 9.00 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக்கொடியை யோகா பயிற்சியாளர் சிவ.சச்சிதானந்தம் கட்டினார்,
காலை 11 மணியளவில் அருள்மாளிகை டிரஸ்டி, நெடி சா.பலராமன் தலமையில், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவர்கள், தெருவாசிகள், மாற்றுத்திறனாளிகள்,500 பேருக்கு போர்வை வழங்கும் மக்கள் நலத் திட்டத்தைஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அப்ரைசர் பி.சிவக்குமார் தொடங்கி வைத்தார், தொடர்ந்து
500பேருக்கு அன்னதானம் வழங்கும் திருப்பணியை, கொட்டியாம்பூண்டி கலியபெருமாள், திருக்கனூர் சந்திரசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள், நிகழ்ச்சியில் 500 ஏழை, எளிய மக்கள் பயனடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெய. அண்ணாமலை, நிர்வாகிகள்பலராமன்,இராமலிங்கம், சரவணபவன், பாரதி, அழகானந்தம், சிவ.சக்திவேல், பன்னீர்செல்வம், வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu