வாக்குப்பதிவிற்கான இயந்திரங்கள் ஆய்வு

வாக்குப்பதிவிற்கான இயந்திரங்கள் ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்படும் இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் தேவையான 2,844 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 2,844-ம், வி.வி.பேட் கருவிகள் 3,034-ம் ஆக மொத்தம் 8,722 எண்ணிக்கையிலான எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த தொகுதியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 150 வி.வி.பேட் கருவிகள், லாரி மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டு அவை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்கட்ட பரிசோதனை செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் சேமிப்பு கிடங்கை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரை திறந்து அந்த வி.வி.பேட் கருவிகளை பார்வையிட்டார்.

இந்த வி.வி.பேட் கருவிகள் பரிசோதனை முடிந்ததும் சேமிப்பு கிடங்கிலேயே பாதுகாப்பாக வைக்கப்படும். தேவைக்கேற்ப அவை பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.அப்போது தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil