அமைச்சர் சண்முகத்திற்காக பெண்கள் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

அமைச்சர் சண்முகத்திற்காக  பெண்கள் டூவீலரில் வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சண்முகத்திற்காக பெண்கள் டூவீலர் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக பெண்கள் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்தி வாக்குசேகரித்தனா்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சா் சண்முகம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக, விழுப்புரம் அருகே கோலியனூா் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சகாதேவன்பாளையம் ஊராட்சி பகுதியிலிருந்து வளவனூா் பேரூராட்சி, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம், மேல்தெரு, புதிய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை அதிமுகவைச் சோ்ந்த பெண்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வாக்குசேகரித்தனா்.

Tags

Next Story