விழுப்புரம் நகராட்சியை அலங்கரிக்கப்போகும் பெண்தலைவர்

விழுப்புரம் நகராட்சியை அலங்கரிக்கப்போகும் பெண்தலைவர்
X

விழுப்புரம் நகராட்சி அலுவலகம்

இதுவரை ஆண்களே அலங்கரித்து வந்த விழுப்புரம் நகராட்சி இருக்கை இனி ஒரு பெண்ணை அலங்கரிக்க போகிறது.

விழுப்புரம் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,

விழுப்புரம் நகராட்சி 1919 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது, பின்னர் 01.10.1953 முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் முதல் நிலை நகராட்சியாக 01.04.1973 முதல் தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் தேர்வு நிலை நகராட்சியாக 02.03.1988 தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 33.11 கி.மீ சதுர பரப்பளைவை கொண்ட நகராட்சி 42 வார்டுகள் கொண்டது,

தற்போது பி.வி.சுரேந்திரஷா நகராட்சி ஆணையாராக உள்ளார்.

மொத்தமுள்ள 42 வார்டுகளில்

எஸ்சி பொது 25, 34, 42 ஆகிய 3 வார்டுகளும்,

எஸ்சி பெண்களுக்கு 13, 18, 32 ஆகிய 3 வார்டுகளும்,

பொது பிரிவில் பெண்களுக்கு 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17, 19, 20, 21, 26, 30, 33,40 ஆகிய 18 வார்டுகளும்,

மீதமுள்ள 1,2,5,12,14,22,23,24,27,28,29,31,35,36,37,38,39,41 ஆகிய 18 வார்டுகளும் ஆண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த நகராட்சி நிர்வாகத்தை திமுக அதிமுக மாறி மாறி கைப்பற்றி பொறுப்பு வகித்துள்ளது, தற்போது திமுக ஆட்சியில் இருப்பது கூடுதல் பலம், இன்னும் கூட்டணிகளுக்கான பங்கீடு நிறைவடையாத நிலையில் இருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

மேலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் இரு கட்சியினர் மத்தியில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.

Tags

Next Story
Marketing இனி ஒரு விளம்பரமல்ல - வாடிக்கையாளர்களை நேரடியாக வரவழைக்கும் AI யின் அதிசயங்கள்!