விழுப்புரத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச வலைதளத்தில் பதிந்து மிரட்டல்

விழுப்புரத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச வலைதளத்தில் பதிந்து மிரட்டல்
X

பைல் படம்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஆன்லைனில் கடன் கொடுத்த சிலர் ஆபாச படத்தை வளையத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் ஆப் மூலம் ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த கடன் தொகையை தவணை முறையில் முழுமையாக செலுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் அந்த பெண், வேறு வழியின்றி ரூ.3 லட்சம் வரை மொபைல் ஆப் நிறுவனத்திற்கு செலுத்தி விட்டபோதிலும் மேலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கேட்டு அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனிடையே கேட்ட தொகையை அப்பெண் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரின் செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் நிறையவே நடக்கிறது, அதில் பலர் பண்பாடு வளையத்திற்கு பயந்து புகார் கொடுக்க முன்வருவதுமிவில்லை, ஒரு சிலர் மட்டுமே இது மாதிரி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!