/* */

விழுப்புரம்: கஞ்சா வழக்கில் இருவருக்கு மூன்று ஆண்டு சிறை

Ganja Crime -ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

Ganja Crime | Villupuram News
X

பைல் படம்.

Ganja Crime -விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மார்டின் ராபர்ட் தலைமையிலான போலீசார், கடந்த 8.8.2019 அன்று விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த 2 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது ஒவ்வொரு மூட்டையிலும் 11 கிலோ வீதம் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேட்டத்தூரை சேர்ந்த ஏழுமலை (35), செல்லான்(60) என்பதும் இருவரும் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலை, செல்லான் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 24 Sep 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்