விழுப்புரம்: நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. உத்தரவு

விழுப்புரம்: நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. உத்தரவு
X

விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகள் கூட்டம் எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எஸ். பி. ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா தலைமை தாங்கி சட்டம்- ஒழுங்கு பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்ததோடு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றுமாறும், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் தீவிர ரோந்துப்பணி ஈடுபடுமாறும் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், கோவிந்தராஜ், உதவி போலீஸ் காவல் கண்காணிப்பாளர் கள் அபிஷேக்குப்தா, ஹர்ஷ்சிங் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!