விழுப்புரம் நகராட்சி பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

விழுப்புரம் நகராட்சி பதவி  ஏற்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
X

விழுப்புரம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

விழுப்புரம் நகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 42 வார்டு உறுப்பினர்கள் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விழுப்புரம் நகராட்சி வார்டு உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில்உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட கலெக்டர் த.மோகன்,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர்.இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!