விழுப்புரம்: அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எம்.பி.க்கள் அறிவுரை

விழுப்புரம்: அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எம்.பி.க்கள் அறிவுரை
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் துரை ரவிக்குமார், விஷ்ணு பிரசாத் பங்கேற்று பேசினார்கள்.

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு திட்டங்கள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என எம்.பி.க்கள் அறிவுரை கூறினர்.

அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்றிட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு எம்.பி.க்கள் துரை.ரவிக்குமார், விஷ்ணுபிரசாத் அறிவுரை கூறினர்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் துரை.ரவிக்குமார் எம்.பி., துணைத்தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஆட்சியர் மோகன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், தேசிய பயிர் பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் எம்.பி.க்கள் துரை.ரவிக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் கேட்டறிந்தனர். மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தக்கூடிய திட்டம் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்றடையும் வகையில் செயலாற்றிட வேண்டும்.

அரசு திட்டங்களை கொண்டு வருவதுடன் அதே வேகத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுத்துறை அலுவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதை உரிய காலத்தில் சேர்த்திட அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அனைத்து நலத்திட்ட பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்ளவும், நல்ல தரத்துடன் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!