விழுப்புரத்தில் விவசாயிகள் சங்க சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
சட்ட நகலை எரித்த விவசாய சங்கத்தினர்.
Farmers Protest Today - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம்-2020 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிப்பதோடு மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்க்கவும் இச்சட்டம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஏழை, எளிய குடிசை பகுதிகளுக்கு வழங்கக்கூடிய மின்சாரத்தை ரத்து செய்வதுடன் மின்சார கட்டணம் என்பது உயரக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுத்தும்.
எனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள இந்த மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று நாடு முழுவதும் அகில இந்திய விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தாண்டவராயன், மாவட்ட தலைவர் சிவராமன், வட்ட செயலாளர்கள் நாகராஜன், முருகன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்தும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியபடி அந்த சட்ட நகலை தீ வைத்து எரித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu