விழுப்புரத்தில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்...

விழுப்புரத்தில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்...
X

விழுப்புரத்தில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சம்மேளன நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, பொறியாளர் சங்க பொருளாளர் கணேசன், ஐக்கிய சங்க நிர்வாகி கவுஸ்பாஷா ஆகியோர் கலந்துகொண்டு மின் வாரிய பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய பணியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்களில் பலர், மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை 37 மாதங்கள் கடந்து இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

எனவே, ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், ஏற்கெனவே பெற்று வந்த சலுகைகளை மின்வாரிய ஆணை இரண்டின் மூலம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஜனவரி 10 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம்தேதி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்றையதினம் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீட்டு மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture