கொரோனாவை ஜீரோவாக்கி ஹீரோ ஆன விழுப்புரம் மாவட்டம்

கொரோனாவை ஜீரோவாக்கி ஹீரோ ஆன விழுப்புரம் மாவட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் 

நேற்று விழுப்புரம் மாவட்டம் கொரோனா தொற்றை ஜீரோவாக்கி ஹீரோ ஆனது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜீரோ கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 46,109 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், நேற்று மட்டும் 3 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றை ஒழிப்பதில் மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் தடுப்பூசி போடுவதில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை விரட்டி, இல்லை என நிருப்பித்து உள்ளது மூலம் மாவட்ட கலெக்டர் மோகனுக்கு பாராட்டு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மாவட்டத்தில் 8,19,176 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, நேற்று முன்தினம் 1016 பேருக்கு பரிசோதனை செய்ததில் முடிவு ஜீரோ, அதனால் விழுப்புரம் மாவட்டம் நேற்று ஹீரோ ஆனது,

இதுவரை மாவட்டத்தில் 24,50,857 தடுப்பூசி போடபட்டுள்ளது,82,565 தடுப்பூசிகள் இருப்பு உள்ளது, நேற்று மட்டும் 7,735 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Tags

Next Story