/* */

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் நிலம் வாங்க தாட்கோ மூலம் ரூ. 5 லட்சம் கடனுதவி..

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வேளாண் நிலம் வாங்க ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் நிலம் வாங்க தாட்கோ மூலம் ரூ. 5 லட்சம் கடனுதவி..
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். (கோப்பு படம்).

தாட்கோ மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க விழுப்புரம் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டிற்கு மொத்த இலக்கு எண்ணிக்கை 7 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 நபர்கள் ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 நபர் பழங்குடியினருக்கும் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 35 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பில், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க தலா ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கானஅரசாணை வரப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும். மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும், மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன் பெயரில் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்ககூடாது.

மேலும், வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிறஇனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்லாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2022 4:51 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!