தேர்தலுக்கு தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் : கலெக்டர் மோகன் தகவல்

தேர்தலுக்கு தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் : கலெக்டர் மோகன் தகவல்
X

விழுப்புரத்தில் வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில்  போலீஸ் எஸ்பி, நகராட்சி ஆணையர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் மோகன் கூறுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில், 210 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. 348 வாக்குச்சாவடிகளில் 2.93 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் மோகன் கேட்டுக் கொண்டார், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!