விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விருது வழங்கிய மாற்றுத்திறனாளிகள்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விருது வழங்கிய மாற்றுத்திறனாளிகள்
X

விழுப்புரம் சி.இ.ஓ கிருஷ்ணபிரியாவுக்கு மகளிர் தின விருது வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விழுப்புரம் சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பின் நிர்வாகியும், ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர் ம. பாபு செல்வதுரை தலைமையில் மகளிர் தின விருது வழங்கும் விழா கோலியனூரில் நடைபெற்றது.

விழாவில் கொரோனா காலங்களில் விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்பட்ட மாவட்டத்தின் பெண் அலுவலர் என விழுப்புரம் சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பினரால் விருதுக்கு தேர்வு செய்து, அந்த விருதினை புதிய அலை மாற்றுத்திறனாளி பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலர் ஏ.தமிழரசி மகளிர் தின விருதினை சி.இ.ஒ கிருஷ்ணபிரியாவிற்கு வழங்கினார். அதனை பெற்று கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சி.இ.ஓ. நேர்முக உதவியாளர்கள் ஆர்.செந்தில்குமார், இல.பெருமாள், மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். தனவேல், ஆர்.பாக்கியலட்சுமி, டி.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future