விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா பொருள் ஒழிப்பில் போலீசார் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா பொருள் ஒழிப்பில் போலீசார் அதிரடி நடவடிக்கை
X
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா பொருட்களை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் தனிப்படையினர் சோதனை செய்தனர்.அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து , போலீசார் கைது செய்தனர், அவர்களை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்த முயன்றனர்.

அப்போது அந்த கடையின் உரிமையாளரான விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 62) சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தார். இதையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3,200 மதிப்புள்ள ஒரு கிலோ புகையிலை பொருட்க ளை பறிமுதல் செய்தனர். மேலும் விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆயந்தூரை சேர்ந்த மனோன்மணி (65), கோழிப்பட்டு சிவக்குமார் (40), தனசேகர் (49) ஆகியோரை காணை போலீசாரும், குமாரக்குப்பத்தை சேர்ந்த நடராஜன் (55) என்பவரை வளவனூர் போலீசாரும் கைது செய்தனர்.

இதேபோன்று மாவட்ட காவல் துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையின் விற்பனையை தடுத்து ஒழிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையான அதிரடி நடவடிக்கை எடுத்து பலரை கைது வருகின்றனர், இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!