விழுப்புரம் மாவட்டத்தில் கள்ள மது ஒழிப்பில் போலீஸ் அதிரடி

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ள மது ஒழிப்பில் போலீஸ் அதிரடி
X
விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டு மது பாட்டில்கள் தொடர்ந்து விற்கப்பட்டு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையின் மூலம் மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பருக்பாஷா (வயது 29), இவர் புதுவை மது பாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டி. எஸ். பி. பார்த்திபன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனே பாரூக் பாஷாவை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 680 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் அருகே புதுவையில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது மொளச்சூர் ஏரிக்கரை ஓரமாக 2 நபர்கள் மது பாட்டில் விற்பதை பார்த்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 23) பெரியசாமி (25) என்பது தெரியவந்தது.

உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மது பாட்டி ல்கள், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று வளவனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலிஞ்சிகுப்பம் அருகே பாண்டிச்சேரி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி வளவனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் தலைமையில் இரவு ரோந்து பணியின் போது கலிஞ்சிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புகழ் வயது 30, தந்தை பெயர் செல்வராஜ், பிள்ளையார் கோவில் தெரு, கலிஞ்சிக்குப்பம் மற்றும் சரவணன் என்கின்ற சந்திரன் வயது 25, தந்தை பெயர் கங்கதுரை, பிள்ளையார் கோவில் தெரு, கலிஞ்சிகுப்பம் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் பாண்டிச்சேரி மதுபானங்கள் சுமார் ஐந்து பெட்டிகள் வைத்திருந்தவரை நிலையம் அழைத்து வந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 225 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மற்றும் ஐந்து லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா