விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பை ஜே.ஆர்.சி. விழிப்புணர்வு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பை ஜே.ஆர்.சி. விழிப்புணர்வு தொடக்கம்

விழுப்புரத்தில் ஜே.ஆர்.சி சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் நெகிழியை கைவிட்டு மஞ்சப்பை பயன்படுத்த ஜே.ஆர்.சி சார்பில் விழிப்புணர்வு பரப்புரை நடந்தது

விழுப்புரத்தில் ஜே.ஆர்.சி சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நெகிழியை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தார். விழுப்புரத்தில் விழுப்புரம் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்த்திடவும், அதற்கு மாற்றாக மக்கள் மஞ்சள் துணிப்பை பயன்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஜேஆர்சி மாவட்ட அமைப்பாளர் ம.செல்லத்துரை தலைமையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் பி.சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணப்பிரியா கலந்து கொண்டு மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மஞ்சப்பையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான அவசர தொலைபேசி எண்கள், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த தகவல்களும் இந்த மஞ்சப்பையில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை செய்த, விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் ம.பாபுசெல்வதுரைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story