தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் மாவட்டம் பின்தங்கி உள்ளது
விழுப்புரத்தில் 13வது தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விழுப்புரம் மாவட்டத்தில் 13-வது சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்திய அளவில் தமிழகம் பின்தங்கி இருந்தாலும்,பல திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதியாகவும், முதலாவதாக உள்ளது,
இல்லம் தேடி தடுப்பூசி, வாரந்தோறும் இரு தினங்களுக்கு தடுப்பூசி திட்டங்களை முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம். முதல் தவணை தடுப்பூசி 79 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 45.12 சதவீதமும் தமிழக அளவிலான தடுப்பூசி போடப்பட்டுள்ளது, விழுப்புரம் மாவட்டத்தில் மாநில சதவீத விட குறைவாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தடுப்பூசி போடுவதில் மாநில சதவீதத்தில் பின்தங்கி உள்ளது. வரும் வாரங்களில் விழுப்புரம் மாவட்டம் தடுப்பூசி போடுவதில் முதல் மாவட்டமாக வர மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும், அதற்கு மாவட்ட சுகாதார துறை பாடுபடவேண்டும் என கேட்டு கொண்டார்,
மேலும் அவர் கூறிகையில், ஒமிக்ரான் 30 நாடுகளில் பரவி இருப்பதாக கூறப்படுகிறது, ஆப்பிரிக்கா,இஸ்ரேல், உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து 3 நாட்களில் தமிழகம் வந்திருந்த 3 ஆயிரத்து 149 பேர்களை சோதனை செய்ததில் 3 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது, அதில் இரண்டு குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களை மருத்துவச் சிகிச்சை எடுக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்,
தமிழகத்தில் விவேக் இறப்பால் பயத்திலிருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் உயிருக்கு பாதுகாப்பு என தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர், தற்போது தினசரி 78,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள், தற்போது வந்துள்ள ஒமிக்ரான் மிகவும் வீரியம் உள்ளது, அதனால் எனக்கு எதிர்ப்பு சக்தி மிகுதி என்ற நம்பிக்கையில் தடுப்பூசி போடாமல் தவிர்க்க வேண்டாம், தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் உயிரிழப்பு குறைவு. அதனால் மக்கள் அலட்சியம் செய்யாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu