உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அதிகம் -81.67% வாக்குபதிவு

உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அதிகம் -81.67%  வாக்குபதிவு
X
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் வாக்குபதிவு சதவீதம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்கு சதவீதம், முகையூர் ஒன்றியத்தில் 79.14 சதவீதமும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 78.45 சதவீதமும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 82.88 சதவீதமும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 80.27 சதவீதமும்,ஒலக்கூர் ஒன்றியத்தில் 86.38 சதவீதமும், வானூர் ஒன்றியத்தில் 86.41 சதவீதமும், செஞ்சி ஒன்றியத்தில் 79.51 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக 81.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது, என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் முதன்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business