விழுப்புரம் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் மாநாடு விழிப்புணர்வு பிரசாரம் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மைல்கல் தெருவில் கொடி பயண தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.தண்டபாணி முன்னிலை வகித்தார்,
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், ஆகியோர் கலந்து கொண்டு மாநாடு குறித்து பேசினர்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி,வி.அர்ச்சுணன்,கே.சுந்தரமூர்த்தி,ஆர்டி.முருகன், எஸ்.சித்ரா,ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்,பி.கலியமூர்த்தி, ஆர்.சேகர், எஸ்.அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொடி மற்றும் கொடிமரம் விக்கிரவாண்டியில் இருந்து புறப்பட்டு சாத்தனூர், ஒரத்தூர் வழியாக சனிக்கிழமை விழுப்புரம் மாநாட்டு திடலை சென்று அடைகிறது.முன்னதாக
பூரி குடிசையை சேர்ந்த பனை ஓலை குழுவினரின் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் விளையாட்டு நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu