விழுப்புரம் மாவட்டம்: இரண்டு நாட்களில் 1532 பேர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம்: இரண்டு  நாட்களில் 1532 பேர் மனு தாக்கல்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக 1532 பேர் ஊராட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத் தலைவர், 5088 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 6097 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர், தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வரும் 23 தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாட்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக விழுப்புரத்தில் 1532 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர். அதில் ஒன்றிய கவுன்சிலருக்கு 4 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 327 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1201 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!