விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 54,474 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாவட்டத்தில், இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மட்டும் 39 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 53,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 221 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!