விழுப்புரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் ஆலோசனை!

விழுப்புரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் ஆலோசனை!
X

விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இரையன்பு ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், விவசாயத்தை நம்பிய மாவட்டம் விழுப்புரம். இது பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.

எனவே, கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராம் மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!