மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர் மோகன்

மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம்  ஆட்சியர் மோகன்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம் வட்டத்திற்கு உட்பட்ட கோலியனூரைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மாணவன் தான் கல்வி கற்க ஜாதி, வருமானம் வகுப்புச் சான்றிதழ் தேவை என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கொடுத்தான். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவனின் கல்வியை கருத்தில் கொண்டு உடனடியாக விழுப்புரம் வட்டாட்சியரை அழைத்து மாணவன் கேட்டுள்ள சான்றிதழ்களை உடனடியாக தயார் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படியே வட்டாட்சியர்கள் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை உடனடியாக தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். அவர் அந்த மாணவன் அய்யப்பனை அழைத்து அவனிடம் சான்றிதழைகளை ஒப்படைத்தார். மாணவன் ஐயப்பன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து வீட்டுக்கு புறப்பட்டான். இது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil