ஏரிக்கரைகளில் காடுகள் வளர்க்க விழுப்புரம் கலெக்டர் அறிவுரை

ஏரிக்கரைகளில் காடுகள் வளர்க்க விழுப்புரம் கலெக்டர் அறிவுரை

தும்பூர் ஏரிக்கரை பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மோகன் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் அடர்காடு வளர்க்க வேண்டுமென்று, கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, தும்பூர் ஏரிக்கரை பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று, திடீரென ஆய்வு செய்தார். ஏரிகரை மற்றும் ஏரி அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடர் காடுகள் வளர்க்கும் பணியை மேற்கொள்ள வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறையினர் ஈடுபட வேண்டும் என்று அப்போது கலெக்டர் அறிவுறுத்தினார். இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான காலியான பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என கலெக்டர் மோகன் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story