விழுப்புரத்தில் சிலம்பத்தில் சிறுவன் உலக சாதனை

விழுப்புரத்தில் சிலம்பத்தில் சிறுவன் உலக சாதனை
X

விழுப்புரத்தில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான்.

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் சிறுவன் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்

விழுப்புரத்தில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான்.

விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தை சேர்ந்த 10 வயதுடைய மாணவன் சரவணன், தனது சிறு வயதிலேயே பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றுவதில் சிறந்த மாணவனாக திகழ்ந்து வருகிறான்.இந்நிலையில் டி.என்.ஆர்.எஸ். அன்பு சிலம்பம் அகாடமி சார்பில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறுவன் சரவணன், சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, கழி சிலம்பம், கத்தி சிலம்பம் என்று பல்வேறு வகையான சிலம்ப வகைகளை தொடர்ச்சியாக 2 மணி நேரம் சுற்றி சாதனை படைத்தான். இந்த சாதனையை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் வீடியோவாக பதிவு செய்து சாதனையை அங்கீகரித்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற செய்து அதற்கான சான்றிதழை சிறுவன் சரவணனுக்கு வழங்கினர்.

இதுவரை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் மட்டுமே சிலம்பம் சுற்றியது நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையாக இருந்த நிலையில் 10 வயது சிறுவன், 2 மணி நேரமாக தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றியது புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்