விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கட்டாய தடுப்பூசி!

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கட்டாய தடுப்பூசி!
X

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்ட காட்சி.

விழுப்புரத்தில் ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் சுற்றியவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து தடுப்பூசி போட வைத்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை மதிக்காமல் விழுப்புரம் நகரத்தில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சுற்றி வளைத்து நான்கு முனை சந்திப்பு அருகே காத்திருந்த மருத்துவ குழுவினரிடம் அழைத்து சென்று கொரானா தடுப்பூசி போட வைத்தனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்த தடுப்பூசி தண்டனை விழுப்புரம் நகரத்தில் காட்டு தீ போல் பரவியதால் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து நகரில் வாகன ஓட்டிகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!