விழுப்புரம்: சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 26 போலீசார் பணியிட மாற்றம்

விழுப்புரம்: சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 26 போலீசார் பணியிட மாற்றம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 26 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன், ஒலக்கூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம் வளத்தி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் இவர்கள் உள்பட மொத்தம் 26 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா