களிமண் சிலைகள் செய்யும் கிராமத்து இளம் மாணவர்கள்

களிமண் சிலைகள் செய்யும் கிராமத்து இளம் மாணவர்கள்
X

களிமண் சிலைகள் செய்து அசத்தும் மாணவர்கள்

விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் தனி திறமையில் களிமண் சிலைகள் செய்து அசத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள நன்னாட்டாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - அம்பிகா தம்பதியினரின் மகன்கள் அரவிந்தன், அகிலன் ஆகிய மாணவர்கள் கொரோனா காரணமாக வீட்டிலிருந்து வருகின்றனர்.

விழுப்புரம் பள்ளியில் மாணவர் அரவிந்தன் ஐந்தாம் வகுப்பும், மாணவர் அகிலன் மூன்றாம் வகுப்பும், படித்து வருகின்றனர். கிராமப் பகுதிகளில் கிடைக்கும் களிமண்ணை நண்பர்கள் உதவியுடன் சேகரித்து அவற்றை எடுத்து வந்து வீட்டில் பல்வேறு களிமண் சிற்பங்களை வடிவமைத்தும், விநாயகர், அம்மன் ஆகிய சிலைகள் அதிகளவில் செய்தும் அசத்தி வருகின்றனர்,

இவர்கள் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆன்லைன் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும், சான்றிதழும் பெற்று உள்ளனர்,அதேபோல் விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலையில் நடைபெற்ற விழாவில் இளம் சாதனையாளருக்கான அப்துல் கலாம் விருது பெற்று அசத்தி உள்ளனர்.

இருவரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாங்களாகவே களிமண் எடுத்து வந்து விநாயகர் சிலையை செய்து அசத்தி வருகின்றனர், இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக நேரில் வந்து பார்த்து பாராட்டுகின்றனர்,

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!