பொதுசொத்தை சேதப்படுத்தியதாக கைதான விக்கிரவாண்டி இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு...

பொதுசொத்தை சேதப்படுத்தியதாக கைதான விக்கிரவாண்டி இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு...
X

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அன்புமணி.

பொதுச்சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கில் கைதான விக்கிரவாண்டி இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்டது ஆவுடையார்பட்டு கிராமம், இங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புமணி (வயது 27). இவர் மீது விக்கிரவாண்டி பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 17.12.2022 அன்று விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வசந்தகுமார் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த விக்கிரவாண்டி போலீஸார் அன்புமணியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அன்புமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து அன்புமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே, அவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருப்பதால், அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்டப்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!