விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் 3 ஆயிரம் பேருக்கு நல உதவிகள்
விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
வள்ளலாரின் 151 வது அவதார நாளையொட்டி விழுப்புரம் வள்ளலார் மடத்தில் 3000 பேருக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை அன்னதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று துவக்கப்பட்டது,நாளை 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், ஏழை மக்கள் பசியாற வேண்டும் என்பதற்காக உணவு பொருட்களை தானமாக வழங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார், அதன் அடிப்படையில் நாளை வள்ளலாரின் 151-வது அவதாரத் திருநாளான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது, விழுப்புரத்தில் உள்ள வள்ளலார் மடத்தில் இன்று காலை முதல் அன்னதானம் துவங்கியுள்ளது, 3 ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
அதன்படி அரிசி உள்ளிட்ட பொருட்களை மன்றப் பொறுப்பாளர்கள் செல்லமுத்து அண்ணாமலை உள்ளிட்டோர் ஊனமுற்றவர்கள், விதவைகள், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கினர். நாளை 6 மணி 10 மணி ஒரு மணி இரவு 7 மணி 10 மணி மறுநாள் காலை ஐந்து முப்பது மணி ஆகிய ஆறு கால ஜோதி தரிசனம் 7 திரை நீக்கி காண்பிக்கப்பட உள்ளது,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu