விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் தடுப்பூசி முகாம்
X
விழுப்புரம் மீன் மார்க்கெட்டிற்கு வந்தவர்களுக்கு, இன்று அதிகாலையில், நகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன்படி, விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலை தடுக்க தடுப்பூசி பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது,

இந்நிலையில், இன்று அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மூவேந்தர் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில், டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நகராட்சியின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!