கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி: கலெக்டர் தகவல்

கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி: கலெக்டர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

Latest News On Corona Vaccine- விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 32-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Latest News On Corona Vaccine- இது குறித்து கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில்நாளை 24ந்தேதி (ஞாயிற்று கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், 2033 இடங்களில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் பொது மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இம்முகாமில் இரண்டு தவணை செலுத்தி 6 மாதங்கள் கடந்த மருத்துவமனை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 18 வயதிற்கு மேற்பட்டோரில் ஊக்குவிப்பு தவணை தேவைப்படுவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறலாம். மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோரில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்க்கு உள்ளானவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது உள்ளோரில் முதல் தவணை 57 ஆயிரத்து,777 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 47 ஆயிரத்து,753 நபர்களுக்கும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளோரில் முதல் தவணை 82 ஆயிரத்து,028 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 69 ஆயிரத்து 361 நபர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணை 16 லட்சத்து,75 ஆயிரத்து 566 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 17 லட்சத்து 86 ஆயிரத்து 63 நபர்களுக்கும், ஊக்குவிப்பு தவணை 38 ஆயிரத்து137 நபர்களுக்கும் செலுத்தி கொண்டு உள்ளனர்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிட் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகள் பாதுகாப்பானது, மிகவும் செயல்திறன் கொண்டதாகும். தடுப்பூசி செலுத்திக் கொள்வது தீவிர நோய்த் தொற்று மற்றும் இறப்பிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுவதோடு பிறருக்கு நோய்த் தொற்று தன்மையைக் குறைக்க உதவும். மேலும் நம்மைச்சுற்றி உள்ளவர்களையும், எளிதில் நோய்த் தொற்று ஏற்படக் கூடியவர்களையும் காக்க உதவும். கொரோனா உயிரிழப்பை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசிதான். எனவே முககவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business