விழுப்புரம் மாவட்டம் சிறப்பு முகாமில் 1,12,100 பேருக்கு தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம். அமைச்சர்கள் பொன்முடி,மஸ்தான், எம்பி கௌதமசிகாமணி, கலெக்டர் மோகன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக தடுப்பூசி போடபடுவதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 7லட்சத்து,91 ஆயிரத்து,161 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது, (3/12/2021) அன்று ஆயிரத்து,416 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் மூன்று பேருக்கு பாசிடிவ் உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாசிடிவ் 0.18 சதவீதம் ஆகும், இன்று சனிக்கிழமை (4/12/21) 1645 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.13 சதவீதமாக உள்ளது.
மாவட்டத்தில் இன்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை, இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88 ஆயிரத்து,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே,91லடாசத்து,74ஆயிரத்து, 900 அபராதமாக வசூலிக்க பட்டுள்ளது, மாவட்டத்தில் 1 லட்சத்து,84 ஆயிரத்து 360தடுப்பூசி இருப்பு உள்ளது, 4/12/2021 சனிக்கிழமை நடந்த 13-வது சிறப்பு முகாமில் 1,12,100 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர், இதுவரை மாவட்டத்தில் 20 லட்சத்து,23 ஆயிரத்து , 401 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பொன்முடி,மஸ்தான், எம்பி கௌதமசிகாமணி, கலெக்டர் மோகன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu