விழுப்புரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சக்கரவா்த்தி தலைமை தாங்கினார். கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க துணைத் தலைவா் துரை, உப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகி மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் தமிழ்மணி வரவேற்றாா்.

சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலா் கீதா, அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்க மாநிலச் செயலாளர் ஜெயபால் ஆகியோா் கலந்து கொண்டு தொழிலாளா்கள், தொழில்சங்கங்களின் உரிமைகளைப் பறித்து, நல வாரியங்களைக் கலைக்கும் மத்திய அரசின் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், உணவுப்பொருள்கள், சிமென்ட், மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு, ஜிஎஸ்டி வரி உயா்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சங்கத்தின் துணைச் செயலாளர் ஜோதி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!