/* */

பன்றிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி

வளவனூர் அருகே பன்றிகள் மீது டூவீலர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

பன்றிகள் மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி
X

விபத்து நடந்த இடம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எனதரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 45),பட்டுரோசா (45). வளவனூர் அருகே சின்ன குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (38) இவர்கள் 3 பேரும் விவசாய கூலி தொழிலாளர்கள்.

இவர்கள் 3 பேரும் புதுச்சேரி மாநிலம் அருகே பகண்டை பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.புதுச்சேரிஅருகே வளவனூர் காவல் எல்லைக்குட்பட்ட கூட்ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றது.

அப்போது கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக சென்றன. இதை சிறிதும் எதிர்பாராத மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ராமமூர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பன்றிகள் மீது மோதினார்.

இதில் மூவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே ராமமூர்த்தி, பட்டுரோஜா ஆகியோர் இறந்தனர். இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிரிழந்த ராமமூர்த்தி, பட்டு ரோஜா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 11 Aug 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  10. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...