விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
X

விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

Villupuram Railway Station- விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Villupuram Railway Station- விழுப்புரம் டவுண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் தாலுகா சேப்ளாநத்தம் கீழ் பாதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(வயது 24), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கர்ணன் மகன் புவனேஸ்வர்(25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்