காசநோய் ஒழிப்பு திட்டம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் விருது
முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழ், வெண்கலப் பதக்கத்தை விழுப்புரம் ஆட்சியரிடம் மாவட்ட காசநோய் துணை இயக்குநா் சுதாகா் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்
விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் பரவல் 20 சதவீதம் மாவட்டத்தில் குறைந்துள்ளதாக ஆட்சியர் பெருமிதம் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆட்சியா் மோகன் தலைமை வகித்து பேசுகையில்,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காசநோய் தொடா்பாக விளம்பரப் பதாகைகள், துண்டறிக்கைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டில் காசநோய் பரவல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது என கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதும் பெற்றுள்ளது. அப்போது அந்த பாராட்டுச் சான்றிதழ், வெண்கலப் பதக்கத்தை ஆட்சியரிடம் மாவட்ட காசநோய் துணை இயக்குநா் சுதாகா் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, நலப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா்கள் (காசநோய்) சுதாகா், (சுகாதாரம்) பொற்கொடி (சுகாதாரம்) உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu