விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக  திறனாய்வு தேர்வு
X
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் 2966 மாணவர்கள் தேர்வு எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு (TRUST) நடைபெற்றது.

அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 11, திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 03, செஞ்சி கல்வி மாவட்டத்தில் 04 என 18 தேர்வு மையங்களில் 2966 மாணவ,மாணவிகள் இன்று திறனாய்வு தேர்வு எழுதினர், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!