விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது
X

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நிழல் தரும் மரம் திடீரென முறிந்து விழுந்தது பரபரப்பு

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு புங்கமரம் நீண்ட காலமாக அவ்வழியே வருவோர் போவோருக்கு நிழல் தந்து கொண்டு இருந்தது. குறிப்பாக அங்கு போக்குவரத்து சரிசெய்யும் காவல்துறையினருக்கு இயற்கை நிழல் தரும் வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய எஸ்பி அந்த இடத்து அருகே காவல்துறையினருக்கு நிழற்பந்தல்அமைத்து கொடுத்தார். அந்த கோபத்தில் மரம் தானே முறிந்து விட்டதோ என அவ்வழியே சென்றவர்கள் வேடிக்கையாக பேசி சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!