தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி நடத்தப்பட்டது. 

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் அலுவலருக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.மோகன் இன்று (31.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூ.ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!