விழுப்புரத்தில் ஒரு வழி பாதை மாற்றத்தால் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரத்தில் ஒரு வழி பாதையில் வாகனங்கள் மக்கள் பாதிப்பு
விழுப்புரம் நகராட்சி பகுதியில் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருவதால் ஒருவழிப்பாதையில் வாகன இயக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் நகரில் மழைக்காலத்தின் போது முக்கிய சாலைகளிலும் மற்றும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லாததாலும், ஏற்கெனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும் சாதாரண மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று வெள்ளம் போல் காட்சியளிப்பது விழுப்புரம் நகரத்தின் தொடர்கதையாகவே உள்ளது.
இதனால் மழைக்காலங்களின் போது சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய இடங்களில் சாலையை கடந்து செல்லும் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே தற்போது மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் காரணமாக காலை, மாலை நேரங்களில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முதல் நான்குமுனை சந்திப்பு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி செல்கிறது. இந்த வாய்க்கால் பணிகள் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை வாகனங்கள் ஒருவழிப்பாதையிலேயே இயக்கப்படும். அதனால் பயணிகளும், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu